கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் சென்னை ஊழியரை தேடி வருகிறார். அவரை கண்டுபிடிக்க கோரிக்கையும் விடுத்துள்ளார்.
சென்னையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான ஒரு போட்டி நடைபெற்ற போது, சென்னை நட்சத்திர விடுதி தாஜ் கோரமண்டல் நிறுவன ஊழியர் ஒருவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு சில அறிவுரைகளை கூறி இருக்கிறார். அந்த அறிவுரை சச்சினுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த ஊழியர் யார் என்று சச்சினுக்கு தெரியவில்லை. அவர் பெயர் கூட சச்சினுக்கு தெரியாது. ஆனால் அவரை சந்திக்க டெண்டுல்கர் விருப்ப படுகிறார். அந்த ஊழியரை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு நெட்டிசன்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறியது, “எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. IND VS WI தொடரின் போது சென்னை தாஜ் கோரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய எல்பௌ கார்ட் பற்றி கூறிய அறிவுரை மிகவும் உதவியது. அவரை தற்போது சந்திக்க ஆசை படுகிறேன், அவரை கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.