Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏமாற்றிய சச்சின்,சேவாக்…. தூக்கி நிறுத்திய கைப்…. மிரட்டிய பதான்…. இந்தியா அபார வெற்றி ….!!

இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி  மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , இந்தியா லெஜெண்ட் ஆடிய முதல் போட்டியில் இந்தியா லெஜெண்ட் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில்  பிரட் லீ தலைமையிலான ஆஸ்திரேலிய லெஜெண்ட் அணியும் , தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் அணிகள் மோதின. இதில் ஸ்ரீலங்கா லெஜெண்ட் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று நடைபெறும் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியுடன் , தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் அணி மோதியது .

 

மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய் பாட்டீல் விளையாட்டு அகாடமி மைதானத்தில் 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய லெஜெண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து. அதிகபட்சமாக தில்ஷான் , கபுகேதரா தலா 23 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்து. கடந்த போட்டியில் வெளுத்து வாங்கிய சேவாக் , சச்சின் , யுவராஜ் முறையே 3 , 0 , 1 எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முகம்மது கைப் 46 ரன் சேர்ந்து ஆட்டமிழக்க இந்தியா தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதான் அதிரடியை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றியடைய வைத்தார்.

31 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி , 3 சிக்ஸ்ஸருடன் 57 ரன் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 18.4 ஓவர்களில் 139 ரன் எடுத்து 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் ஆடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் இந்திய அணி உள்ளது.

Categories

Tech |