கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் ,அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோன பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த தொற்றமானது, தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருவதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் ,மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பானது ,வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைப் பற்றி சச்சின் தெண்டுல்கர் தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பது, எனக்கு சிறிய அறிகுறிகளுடன் கொரோனா தொற்று இருப்பதால் ,என்னுடைய வீட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டேன். இதனால் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் ,கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வேறு யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சாலை விழிப்புணர்வுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ,இந்திய அணியின் கேப்டனாக சச்சின் தெண்டுல்கர் பங்கு பெற்றார். இதன் காரணமாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.இந்தப்போட்டியில் இலங்கை, வங்காளதேசம் இங்கிலாந்து ,தென்னாபிரிக்கா ,வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளும் இடம் பெற்றன.