சாலை பாதுகாப்பு டி20 போட்டியில் விளையாடிய ,முன்னாள் இந்திய அணி வீரரான இர்பான் பதான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் .
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது . இதனால் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்கள் மற்றும் வீரர்கள் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சமீபத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக, தலைமையேற்று விளையாடினார். இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் கலந்து கொண்டு, இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். இதனால் முதலில் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அவர் வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் , என்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளும் படி கேட்டுக்கொண்டார். இந்நிலையில் சச்சினை தொடர்ந்து, அந்த அணியில் விளையாடிய யூசுப் பதான் ,பத்ரிநாத் போன்ற வீரர்களுக்கும் தொற்று உறுதியானது. அந்த வரிசையில் தற்போது இர்பான் பதான் ,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் டுவிட்டரில் கூறும்போது, கொரோனா தொற்றிற்கான எந்த ஒரு அறிகுறியும் எனக்கு தெரியவில்லை என்றும், ஆனால் மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ,வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.