Categories
கிரிக்கெட் விளையாட்டு

நெஞ்சம் குளிர்கிறது…. ”ஊக்கத்துடன் தொடங்குங்கள்”….. சச்சினின் நெகிழ்ச்சி ட்வீட் …!!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ அவரது ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

2020 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், கிரிக்கெட்டின் கடவுள் என கொண்டாடப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில், தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராம் என்னும் மாற்றுத்திறனாளி சிறுவன், இரண்டு கால்கள் முடங்கியிருந்த போதிலும் பேட்டிங் செய்தது மட்டுமில்லாமல் தவழ்ந்துகொண்டே ரன்களையும் எடுத்தார்.

இதையடுத்து, ராமின் இந்த வீடியோவைப் போல இந்த 2020ஆம் ஆண்டை நீங்கள் ஊக்கத்துடன் தொடங்குங்கள் என சச்சின் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், எனது நெஞ்சை குளிரச் செய்த இந்த வீடியோ, நிச்சயம் உங்களது நெஞ்சையும் குளிர வைக்கும் என பதிவிட்டுள்ளார். சச்சினின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Categories

Tech |