பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாரா அலிகான். இவர் தனுஷ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுவை காதலிப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல்களை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் 2 பேரும் ஒன்றாக விமானத்தில் சென்றனர். இதனால் பலரும் ஷுப்மன் மற்றும் சாரா காதலிப்பதாக கூறிய நிலையில், இருவரும் அதை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் சாராவை காதலிக்கும் தகவலை தற்போது ஷுப்மன் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி விட்டார்.
அதாவது பஞ்சாபி ஷார்ட் ஷோ ஒன்றில் ஷுப்மன் கலந்து கொண்டார். அப்போது ஷுப்மன் பேட்டி கொடுத்தார். அவரிடம் பாலிவுட் ஹீரோயின களில் பிட்டானவர் யார் என்று கேள்வி எழுப்பப் ட்டது. அதற்கு சாரா என்று பதில் அளித்தார். இதனையடுத்து நீங்கள் சாராவை டேட் செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இருக்கலாம் என்று பதில் அளித்தார். உடனே அவரிடம் உண்மையை கூறுங்கள் என்று கேட்க அவரும் மழுப்பலாக பதில் அளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
இதற்கு முன்பாக ஷுப்மன் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை காதலிப்பதாக பேசப்பட்டது. ஆனால் தற்போது அந்த சாரா இல்லை என்றும், நடிகை சாரா வைத்தான் ஷுப்மன் காதலிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பாக நடிகை சாரா பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆரியனுடன் டேட்டிங்கில் இருந்தார். இவர்கள் 2 பேரும் தற்போது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.