இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தமது மகளுடன் பைக் ஓட்டும் வீடியோவை, வடிவேலு காமெடியுடன் பொருத்தி சென்னை சூப்பர் கிங்ஸ், ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஊரடங்கு காலங்களில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
What if Vaigai Puyal #Vadivelu was desperately wanting to see #Thala @msdhoni, just like the rest of us?! 😂😂😂 #SoundOn #WhistlePodu VC: @SaakshiSRawat pic.twitter.com/Ou1GG2KFNb
— Chennai Super Kings (@ChennaiIPL) April 26, 2020
வீட்டில் இருக்கும் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களது நேரத்தை செலவிடுவது குறித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமது மகளை பைக்கில் ஒரு ரவுண்டு அழைத்து செல்லும் தோனியின் வீடியோவை அவரது மனைவி சாக்சி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் ஒரு காட்சி, சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தோனி பைக் ஓட்டும் காட்சியை வைகைப்புயல் வடிவேலு பார்க்க விரும்பினால், எப்படி இருக்கும் என பதிவிட்டு, “வாம்மா மின்னல்” காமெடியுடன் தோனியின் வீடியோவை இணைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவிட்டுள்ளது. இந்த எடிட்டிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.