செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இந்த நேரத்தில் ஒரு வருத்தமான செய்தியை ஊடக நண்பர்களுக்கு இங்கே சொல்லி, அதன் மூலமாக தமிழக அரசு வேகமாக சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த கருத்தை சொல்லுகின்றேன்.
சமீபத்தில் தமிழக தீண்டாமை ஒழிப்பு இயக்கம் 24 மாவட்டத்தில் 386 ஊராட்சிகளில் ஒரு சர்வே நடத்துகிறார்கள், அங்கே பட்டியல் இன சமுதாயத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் வந்திருக்கக் கூடிய தலைவர்களுக்கு என்ன மரியாதை இருக்கின்றது ? என்று ஒரு சர்வே எடுக்கிறார்கள்.
அவர்கள் கூறிய கருத்தை பார்க்கும் போது பேரதிர்ச்சியாக இருக்கின்றது. கிட்டத்தட்ட 20 ஊராட்சி தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று காலையில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கின்றது அந்த பஞ்சாயத்தில்..
22 ஊராட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு பட்டியல் இனத்தை சார்ந்த சகோதர, சகோதரிகள் தலைவர்களாக இருக்கிறார்கள்… அவர்களுக்கு அமருவதற்கு இருக்கை மறுக்கப்பட்டிருக்கிறது. 42 ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்களுடைய பெயர் பலகை வைப்பதற்கு அந்த ஊராட்சி அனுமதி கிடையாது.
ஒரு பக்கம் நாம் வந்து சமூக நீதி, சமநீதி என்று பேசிக் கொண்டிருக்கின்றோம், ஆழ்வார்கள் நாயன்மார்கள் பூமி என்று பேசிக் கொண்டிருக்கின்றோம். எவ்வளவு விஷயம் பேசும்போது 75 ஆண்டுகள் கழித்தும் கூட தமிழகத்தில் இது நடந்து கொண்டிருக்கிறது.
அதாவது அவர்கள் எல்லா மாவட்டத்திற்கும் போகவில்லை. வெறும் 24 மாவட்டத்தில் 386 ஊராட்சிகளில் நடத்தின சர்வே ரிப்போர்ட் இது. அதிலும் பார்த்தீர்கள் என்றால், 15 சதவீதம் இந்த பிரச்சனை இருக்கிறது. இதைப் பற்றி முதல்வர் அவர்கள் இதுவரை கருத்து சொல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது.
கள்ளக்குறிச்சியில் இப்போதுதான் நாம் பார்த்தோம். ஊராட்சி மன்ற தலைவருக்கு இதே பிரச்சினையாகி, பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்கள் சென்று பேசி விட்டு வந்தார்கள். எங்கேயும் தீண்டாமை சுவர் என்பது இருக்கக் கூடாது என்பதை ஒரு கோரிக்கையாக முதலமைச்சருக்கு வைக்கின்றோம் என தெரிவித்தார்.