நடிகை சில்க் ஸ்மிதாவை நினைவு கூர்ந்து நடிகை ராதா எமோஷனல் பதிவை வெளியிட்டுள்ளார்
தமிழ் சினிமாவிற்கு இனி எத்தனை நடிகைகள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் என்றும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சில்க் ஸ்மிதா. இப்படி பிரபல நடிகையாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வந்த சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்து இறந்துவிட்டார். அவரது தற்கொலைக்கான காரணம் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் சில்க் ஸ்மிதா அவர்களின் நினைவு நாளாகும். இதனால் மற்றொரு பிரபல நடிகையான ராதா, சில்க் ஸ்மிதா குறித்த சில எமோஷனல் பதிவுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சில்க் ஸ்மிதாவின் நினைவு தினத்தை நினைவு கூர்கிறேன். எனது முதல் படத்தில் அவர் என் சகோதரியாக நடித்தார்.
கிளாமரைப் போலவே உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிப்பார். இத்தகைய கலைஞரை தனது ஆரம்ப நிலையில் இழந்தது வருத்தமாக இருக்கிறது.