‘ஓமிக்ரான்’ வைரஸ் பரவல் காரணமாக ‘மாநாடு’ படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அகில இந்திய சிம்பு ரசிகர்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது .இதில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் சிம்புவுக்கு கம்பேக் படமாக அமைந்தது . இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. தற்போது சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாநாடு திரைப்படத்தின் 25-வது நாளை சக்சஸ் மீட்டிங் வைத்து படக்குழுவினர் கொண்டாடினர். ஆனால் நடிகர் சிம்பு படப்பிடிப்பில் இருந்ததால் இதில் பங்கேற்க முடியவில்லை.
இந்நிலையில்மாநாடு படம் வெற்றியை தொடர்ந்த சிம்பு தனது ரசிகர்களுடன் விரைவில் ஒரு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அகில இந்திய STR தலைமை ரசிகர் மன்றத்திலிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற இருந்த மாநாடு படத்தின் வெற்றி விழா ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு வெற்றி விழா கொண்டாட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதோடு விரைவில் விழா நடைபெறும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த தகவல் சிம்புவின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.