Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மழை பெய்ததால் பாதுகாப்பு இல்லை… அனுமதி கொடுக்க முடியாது… திரண்டு வந்த பக்தர்களுக்கு ஏமாற்றம்…!!

மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. ஊரடங்கு நடைமுறை காலத்தில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும் அமாவாசை, பிரதோஷம் போன்ற நாட்களில் மட்டும் இந்த சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து மதுரை, கோயம்புத்தூர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்காக வனப்பகுதியில் திரண்டனர்.

இதற்கிடையே வனத்துறையினர், கோவில் நிர்வாகத்தினர், காவல்துறையினர் ஆகியோர் நீர் வரத்தை ஆய்வு செய்த பின் கோவிலுக்குள்பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனையில் வனத்துறையினர் கூறும்போது, வானிலை மையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. அதனால் நீர் வரத்து அதிகரிக்கலாம். எனவே பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளனர். மேலும் வரும் நாட்களில் மழை தொடர்ந்தால் பக்தர்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வனப்பகுதியில் காத்திருந்த பக்தர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Categories

Tech |