Categories
பல்சுவை

கடலின் பாதுகாப்பு….. நமது கடல்…. நமது பொறுப்பு…!!

ஜூன் 8 உலக கடல் தினம். பரந்து விரிந்து பிரமிப்பை ஏற்படுத்தும் இயற்கை தந்த பிரம்மாண்டம் கடல். 2008 ஆம் ஆண்டு கூடிய ஐநா அவை கடலினை காக்கும் பொருட்டு ஜூன் 8 ஆம் நாளை கடல் தினமாக அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

புவியின் முக்கிய பகுதியான கடல் பூமியின் நுரையீரல் போன்றது என்று ஐநா வர்ணனை செய்துள்ளது. சுவாசம், உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடலை நாம் சார்ந்து உள்ளோம். பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கு சூழலியல் மண்டலம் சம நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.

அத்தகைய சமநிலையை ஏற்படுத்துவது மீனவர்களின் வாழ்வாதாரமான கடல் முக்கிய பங்காற்றுகிறது. கடல் வெப்பநிலை அதிகரித்தல், கடல்மட்டம் உயர்தல், கடல் அமில மயமாகுதல் போன்றவை கடலுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆபத்தை விளைவிக்கும். நம் கடல் நமது பொறுப்பு என்பதை உணர்த்தவே வருடம் தோறும் கொண்டாடும் உலக கடல் தினம்.

Categories

Tech |