பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் மாகாண அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறியிருந்தார். இது பாகிஸ்தான் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க மாகாண அரசுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமாபாத் நகரின் புறநகர் பகுதியில் இருக்கும் இம்ரான் கானின் குடியிருப்பில் காவல்துறையினர் 94 பேரும், ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள். அவர் வெளியில் சென்றால் அவருடன் 4 காவல்துறை வாகனங்களும், அதிகாரிகள் 23 பேரும், ராணுவ வீரர்கள் 5 பேரும் பாதுகாப்புக்காக உடன் அனுப்பப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.