தாஜ்மஹால் வளாகத்தில் 4 நபர்கள் காவி கொடியை கையில் ஏந்தி வீடியோ எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மஹால். இது உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இது ஷாஜஹானால் மும்தாஜுக்காக கட்டப்பட்ட காதல் கோட்டையாக புகழப்படுகிறது. இந்நிலையில் தாஜ்மஹால் வளாகம் அருகே 4 பேர் திடீரென்று காவி கொடியை கையில் ஏந்தி அசைத்தபடி வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.
காவிக்கொடி ஏந்தி கோஷம் எழுப்பிய அந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இதுகுறித்து புகார் அளித்ததன் அடிப்படையில் தாஜ்மஹால் வளாகத்தில் காவி கொடி காட்டிய பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தாஜ்மஹாலுக்கு சென்று ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.