ஆஸ்திரேலியாவில் சிறுவன் ஒருவன், கயிறு கொடுங்கள் நான் சாகப் போகிறேன் என்று கதறி அழுகின்ற காட்சியை நடிப்பு என்று குற்றம் சாட்டிய பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிர்ஸ்பேன் என்ற நகரத்தில் யாராகா பெய்ல்ஸ் என்பவர் தனது மனைவி மற்றும் மகன் குவாடன் ஆகியோருடன் வசித்து வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது மகன் வளர்ச்சி குறைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவனின் வகுப்பு மாணவர்கள் கொடுமை செய்கிறார்கள் என்று கூறி, மகன் குவாடன் கதறி அழுகின்ற காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார். மேலும் அவர்’ என் மகனை அனைவரும் துன்புறுத்துவதை நான் நேரடியாக பார்த்தேன். மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றி பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார். குவாடன் கதறி அழுகின்ற வீடியோ காட்சி உலகம் முழுவதும் பகிரப்பட்ட நிலையில், அச்சிறுவனுக்கு பெரும் ஆதரவையும் புகழையும் கொடுத்துள்ளது. அதுமட்டுமன்றி பெரிய நிதி உதவிகளையும் அளித்துள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கட்டுரையாளர் மிராண்டா என்பவர் சிறுவனுக்கு தொடர்ந்து நிதியுதவி கிடைப்பதை விமர்சிக்கும் வகையில், ” குவாடன் திட்டமிட்டு அழுதிருக்கிறான். அதற்கான பயிற்சியை அவரது தாய் தான் அளித்துள்ளார் “என குற்றம்சாட்டி இருக்கிறார். அதனால் மனமுடைந்த குவாடனின் குடும்பத்தினர் மிராண்டா பணியாற்றும் நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா ஊடகத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
https://twitter.com/sikander555YT/status/1230665249000493056