Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் சற்று முன் இவர்‌ தான் எலிமினேட்….. எதிர்பார்த்தது நடந்து விட்டதால் பார்வையாளர்கள் ஹேப்பி…..!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரத்தில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த ராபர்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர், ரச்சிதாவிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறை பலருக்கும் பிடிக்காத நிலையில் அவரை ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என பார்வையாளர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் பார்வையாளர்கள் எதிர்பார்த்ததை போன்று தற்போது மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |