தனுசு ராசி அன்பர்களே…! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் முழு அக்கறை கொள்ளுங்கள். அதிக முயற்சி எடுத்து முன்னேற முயலுங்கள் உங்கள் வெற்றி உங்கள் பக்கம் இருப்பதையும் மறந்து விடாதீர்கள். நீர்நிலைகளில் கவனமுடன் இருங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாகவே கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள்.
கணவர் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும். சுய தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்களுக்கு மற்றவரின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். சகோதரியிடம் வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். பழைய பாக்கிகள் வசூல் செய்யும் பொழுது வேகம் காட்ட வேண்டாம். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாகவே இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். செரிமானம் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் போது காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.