Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…வாக்குவாதத்தை தவிர்க்கவும்…ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    சிலரது பேச்சு உங்களுக்கு சங்கடத்தை கண்டிப்பாக கொடுக்கும். அவரிடம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வாக்குவாதம் செய்யாதீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர அதிகமாக தான் உழைக்க வேண்டும்.  பெண்களுக்கு ஓரளவு அளவான பணவரவு இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் நல்ல மதிப்பை பெறக்கூடும். பெண்கள் தாய்வீட்டு உதவி கேட்டுப் பெறுவார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும்.

குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் செல்லும். அதற்காக சிறு தொகையையும் இன்று செலவிட நேரிடும். பொன் பொருள் சேர்க்கையும் ஏற்படும். மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியமும் நல்லபடியாகவே இருக்கும். அதே போல யாருக்கும் உதவி செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செய்யுங்கள்.

அரசு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் அரசாங்கம் மூலம் வந்து சேரும். இன்று ஓரளவு சிறப்புமிக்க நானாகத்தான் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்:  5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |