Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “கடினமாக உழைக்க வேண்டும்”… கணவன் மனைவிக்கிடையே நெருக்கம்..!!

மற்றவர்களுக்காக பாடுபடும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எவரிடமும் சார்ந்த குணத்துடன் பேசுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து வளரும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் போன பொருட்களை தேடி அலைவீர்கள். அந்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று  தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். பணவரவு திருப்தியைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்களும்  கிடைக்க பெறுவீர்கள்.

உத்யோகம் தொடர்பாக இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். இன்று ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு மட்டும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். முடிந்தால் மற்ற மாணவர்களுடன் நீங்கள் ஒத்துப் போவது மிகவும் சிறப்பு. பொறுமையை கையாளுங்கள். அனைத்தும் சிறப்பாக வந்து சேரும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது கருநீல நிறத்தில்ஆடையோ  அல்லது கரு நீலத்தில் கைகுட்டையோ எடுத்து சென்றால் அனைத்து காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |