Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “வேண்டாத நபர் ஒருவரை சந்திக்க கூடும்”… மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.!!

கஷ்டங்களை மனதில் வைத்துக் கொண்டு வெளியில் சிரித்துக் கொண்டிருக்கும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று வேண்டாத நபர் ஒருவரை முக்கியமான இடத்தில் சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக கையாளுங்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். வெற்றியும் கிடைக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஆதரவால் மிகவும் சந்தோசமாக காணப்படுவார்கள். அடுத்தவரின் உதவிகள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுடைய செயல் திறனும் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களின் வருகை இருக்கும். அதனால் மகிழ்ச்சி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். பெண்களால் இன்று உங்களுக்கு லாபம் இருக்கும். மனதை மட்டும் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் நல்லபடியாகவே நடக்கும். சரிங்க எது எப்படியாக இருந்தாலும் இன்று தீப ஓளி திருநாள் என்பதால் உங்களுடைய கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் தூக்கி தூர போட்டுவிட்டு இன்று  இந்த தீபாவளி திருநாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போதும். முடிந்தால் இன்று நீங்கள் மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை வைத்துக்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |