Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “இன்று புகழ் மிக்கவர்களை சந்திப்பீர்கள்”… ரகசியத்தை பாதுகாப்பது சிறப்பு..!!

தானம் தர்மம் செய்வதில் தாராள குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே.!! இன்று புகழ் மிக்கவர்கள் சந்திப்பு கிட்டும் நாளாக இருக்கும். வருமானம் இன்று சிறப்பாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு மதிப்பு கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போது மட்டும் பாதுகாப்பாக இருங்கள். பாதுகாப்பாக வையுங்கள். இன்று எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். கிடப்பில் இருந்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உருவாகும், பார்த்துக்கொள்ளுங்கள். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மையை கொடுக்கும்.

முடிந்தால் இன்று நீங்கள் ரகசியத்தை பாதுகாப்பது மிகவும் சிறப்பு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். மனமும் நிம்மதியாக காணப்படும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடும். விளையாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு படிப்பது நல்லது. இன்று படித்ததை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |