தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக் கூடிய தனுசுராசி அன்பர்களே.!! இன்று பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். செலவை குறைக்க தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிருங்கள். இன்று குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரிடும். மனதை மட்டும் இன்று கட்டுபடுத்தி விடுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும்.. வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவதால் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கி நெருக்கம் ஏற்படும்.
இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் கடுமையாக உழையுங்கள் விளையாட்டு ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். நல்ல முன்னேற்றகரமான சூழல் இருக்கும். தயவுசெய்து இதை செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்