மற்றவர்களின் நலனுக்காக மிகவும் கடுமையாக உழைக்கக் கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஊக்கத்தையும் கொடுப்பார்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான பணியை மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் குழந்தைகளின் நலன் சிறக்க கூடுதல் பாசத்துடன் தகுந்த உதவிகளைச் செய்வீர்கள். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். இழுபறியாக இருந்த காரியம் நல்லபடியாக முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உங்களுடைய செயல் திறமையும் நல்ல அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு எப்பொழுதுமே உங்களுக்கு உண்டு. சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது கவனமாக மேற்கொள்ளுங்கள். சுலபமாக முடிந்துவிடும். இன்று நினைக்கக் கூடிய காரியங்கள் சற்று தாமதத்தை கொடுக்கலாம்.
அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுடைய சிந்தனை திறனும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே என்று நீங்கள் முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான பணியை செய்யும் பொழுதோ ஆரஞ்சு நிறத்தில் ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் இன்று சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். அனைத்து விஷயமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்