Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “சம்பாத்திய நிலை இன்று உயரும்”… உங்களைக் கண்டு மற்றவர் பயப்படுவார்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! தங்கள் சம்பாத்திய நிலை இன்று உயரும். அதாவது உங்களுடைய வருமானம் இன்றைக்கு பல மடங்கு உயரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். மிகவும் கடினமான செயலைக் கூட எளிதாக வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அனைவரது  பார்வையிலும்  நீங்கள் பொறாமைப்பட கூடியவராக திகழ்வீர்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று காரியத்தில் வெற்றி கிடைக்கும். உடலில் சோர்வு இருக்கும். வீண் பகை விலகிச்செல்லும். உங்களைக் கண்டு மற்றவர் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். மெத்தனமான போக்கு மாறி வெற்றி கிடைக்கும். வாடிக்கையாளரிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள். அந்த அன்பு ஒன்று போதும் உங்கள் வாழ்க்கையை வசமாக்கிவிடும். அதேபோல நீங்கள் மற்றவரிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் பொறுமையாக பேசுங்கள்.

அது போதும் இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுபோலவே மாணவர்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக எழுந்து நின்று உங்கள் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்தை செய்யும்போதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் கட்டாயமாக காலையில் காக்கைக்கு அன்னமிட்டு வாருங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |