தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் கஷ்டத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணி நிறைவேற கூடுதலான முயற்சி அவசியம். தொழில் வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இன்று பணவரவு இருக்கும். இடமாற்றம் இருக்கும். வெளியூர் பயணங்கள் இருக்கக்கூடும். அலைச்சல்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்துக்காக கூட அலைய வேண்டி தான் இருக்கும். பணிச்சுமை காரணமாக திடீர் கோபம் கொஞ்சம் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக செயல்படுங்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் மிக கவனமாக கையாளுங்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் சிறப்பு பெறுவதற்கு கொஞ்சம் கூடுதல் முயற்சி தேவைப்படும். பாடத்தில் மட்டும் கவனமாக இருங்கள். சக மாணவருடன் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்