Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “இன்று முயற்சிகளில் வெற்றிகிட்டும்”… மற்றவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாளாக இருக்கும். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சகோதரர் வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் விலகிச்செல்லும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும். இன்று தடை தாமதம் வீண் அலைச்சல் போன்றவை இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக செயல்படுங்கள். எல்லோரும் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். நீங்களும் மற்றவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.திட புத்தியும் பல வழிகளில் உழைத்து சம்பாதிக்க கூடிய திறமையும் மேலோங்கும். உங்கள் பணிகளில் யார் குறுக்கே வந்தாலும் அதை சாமர்த்தியமாக எதிர்கொண்டு சமாளித்து முன்னேறுவீர்கள்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையில் அன்பு கூடும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுடைய வாழ்க்கையில் புதியதாக மாற்றங்கள் நிகழும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :  5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்

Categories

Tech |