Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள்”… உறவினரிடம் பேசும் போது கொஞ்சம் கவனம்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சுமாரான நாளாகவே இருக்கும். சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவீர்கள். வியாபாரம் விருத்தியாக கடினமான உழைப்பு தேவைப்படும். படிப்பில் கூடுதல் கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் நாட்டம் செல்லும். வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். தேவையான உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது இன்று நல்லது.. காரியத்தில் தடை தாமதம் போன்றவை இருக்கும். வீண் அலைச்சலும் உண்டாகும். உங்களுடைய புத்தி சாதுர்யத்துடன் கையாளுவதால் லாபமான காலமாக அமைக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள்.

பொறுமையாக இருங்கள். எந்த பிரச்சனையையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் அது போதும். உங்களுடைய உறவினரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். உறவினரிடம் கேட்ட உதவிகள் கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். அதற்கு ஏற்றார்போல் இன்றைய நாளை திட்டமிடுங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய அளவில் நல்வழிப்படுத்தும். கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்து காரியத்தையும் சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |