Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “பிறர் பாராட்டும் படி செயல் இருக்கும்”… போட்டிகள் விலகிச்செல்லும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று பிறர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற புதிய திட்டத்தை உருவாக்குவீர்கள். கூடுதலாகவே பண வரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க நல்ல யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு மட்டும் கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். போட்டிகளும் விலகிச்செல்லும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். சமயத்திற்குத் தகுந்தாற்போல் உங்கள் கருத்துக்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். துன்பம் வருவதும் போல் இருக்குமே தவிர ஆனால் ஏதும் வராது. உங்களுடைய நல்ல குணத்திற்கு இன்று நல்லதே நடக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி கொடுப்பதாக இருக்கும். மன கவலை மட்டும் அவ்வப்போது வந்து செல்லலாம். முயற்சிகளில் இருந்த தடை விலகி செல்லும்.

எதிலும் எச்சரிக்கை என்பது எப்பொழுதுமே இருக்கட்டும். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள். கலகலப்பான சூழல் இருக்கும். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதல் கைகூடும். திருமணம் போன்ற யோகங்கள் கைகூடும். இன்று முயற்சியின் பேரில் சில காரியங்களை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய காரியம் வெற்றி பெறும். அதுமட்டுமில்லை கர்ம தோஷங்கள் நீங்கி செல்வ நிலையை உயர்த்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் :  3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |