Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “வீண் கவலை கொஞ்சம் ஏற்படும்”… வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.!!

அனைவரையும் வசீகரிக்க கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கக் கூடும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை கொஞ்சம் ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவருடன் சில்லறை சண்டைகள் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனங்கள் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் கொஞ்சம் குறைய கூடும்.

ஆகையால் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் செயல்படுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஆசிரியர் சொல்படி பணி நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கிய இடங்களுக்கு செல்லும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் இன்று அனைத்து காரியமும்  நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |