Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்”… எடுத்த காரியம் சாதகமாகவே நடந்து முடியும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று யோகமான நாளாக இன்றைய நாள் இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். அதே போல எளிதாக நிறைவேறும். வங்கிச் சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். தொழில் கூட்டாளிகள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். பழைய வீட்டை பராமரிக்கும் சிந்தனை தோன்றும். இன்று எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். பணவரவு நன்றாகவே இருக்கும். வேலைப்பளு காரணமாக நேரம் தவறி மட்டும் உணவு உண்ண வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும் பார்த்துக்கொள்ளுங்கள். உடல்நிலையில் மட்டும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு வீண் செலவுகள் குறையும். பயணங்கள் செல்ல நேரிடும்.

திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியமும் சாதகமாகவே நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். பழைய சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும்.குடும்பப் பிரச்சினைகளில் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இன்று வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அந்த பயணம் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். உங்கள் திறமையை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும்.

அதுபோலவே மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தயவுசெய்து ஆசியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். சக மாணவரிடம் எந்தவிதமான பிரச்சினைகளும் வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு உணவாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்துமே நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |