Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “இன்று ஆச்சரியமான சம்பவங்கள் நடக்கும்”… கொடுக்கல் வாங்கலில் கவனம்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாளாக இருக்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். இன்று வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். கவனத்துடன் பாடங்களை படியுங்கள். எதிரில் இருப்பவர்களை எடை போடும் சாமர்த்தியம் என்று உண்டாகும்.

பெண்கள் பெரியோர்களின் ஆசியைப் பெற்றால் எந்த காரியத்தையும் சிறப்பாக செய்யலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். அதுபோலவே இன்று வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நண்பர்களிடம்  பேசும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக பேசுங்கள் அது போதும். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் இன்று ஈட்டக் கூடிய சூழல் இருக்கும்.

இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகம் கண்டு களியுங்கள். அன்னாபிஷேகத்தை நீங்கள் பார்த்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதுமே வற்றாத செல்வம் ஏற்படும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |