Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “நல்லவரையும் தவறாகக் கருதும் எண்ணம் ஏற்படும்”… தாய் தந்தையின் உடல்நலத்தில் எச்சரிக்கை..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்வு மாறுபட்ட தன்மையில் இருக்கும். உங்களிடம் பழகும் நல்ல வரையும் தவறாகக் கருதும் எண்ணம் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணம் வரவு குறைந்த அளவில்தான் இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் நலம் சீராக இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு டென்ஷனை கொடுக்கக்கூடியதாக இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

தாய் தந்தையின் உடல்நலத்தில் எச்சரிக்கை அவசியம். குலதெய்வத்தை வழிபட்டு எந்த காரியத்தையும் தொடங்குங்கள். இன்று உங்களின் நிர்வாகத் திறமை கூடும். நிதி நிலையும் உயரும். அதேபோல குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கும். பணவரவு கொஞ்சம் இருக்கும். அது மட்டுமில்லாமல் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் தயவு செய்து வளர்த்து கொள்ளுங்கள். காரியத்தில் பொறுமையாகவும் நிதானமாகவும் செய்யுங்கள். வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இருந்தாலும் கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் இருங்கள். ஆசிரியர்களின் சொல்படி கேட்டு நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு அனைத்து காரியத்தையும் செய்யுங்கள். காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |