Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “யாரிடமும் உங்க ரகசியத்தை பகிராதீங்க”… எந்த விஷயத்தையும் யோசித்து செய்யுங்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! உங்களின் சிரமம் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். கஷ்டமான சூழ்நிலை மெல்ல மெல்ல சரியாகும். யாரிடமும் உங்களுடைய ரகசியத்தை பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். இன்று சுமாரான அளவிலேயே பண வரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். இன்று மனதில் எதை பற்றியாவது சிந்தனை வந்து கொண்டே இருக்கும். இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும்.

இன்று எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள் அது போதும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் கொஞ்சம் திண்டாடக் கூடிய சூழல் இருக்கும். யாருக்கும் எந்தவிதமான வாக்குறுதிகளை தயவுசெய்து கொடுக்காதீர்கள். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனமாக நடங்கள். கூடுமானவரை ஜாமீன் கையெழுத்து ஏதும் போடவேண்டாம்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடையில் செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்களை சிறப்பு மிக்க நாளாக மாற்றி அமைத்துக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |