தனுசு ராசி அன்பர்களே..!! தாய் சொல்லை தட்ட மாட்டீர்கள். அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் பணிவு தன்மை இல்லை எனில் அதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அதில் மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தொழில் கொடுக்கல் வாங்கல் ஓரளவு சிறப்பாக இருக்கும். இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாரிடமும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது.
பதவி உயர்வு சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக் குழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை இருக்கும். அவர்களின் நலனுக்காக இன்று நீங்கள் பாடுபடுவீர்கள். இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணத்தின் போது உடமைகள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இன்று தடைகளைத் தாண்டியும் நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்