தனுசு ராசி அன்பர்களே..!! மனதில் இருந்த கவலை நீங்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன்களை பெறமுடியும்.
பிள்ளைகள் உங்களுடைய கருத்துக்களை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனமாக இருங்கள். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். யோகமும் ஏற்படும். ஏதேனும் ஒரு வகையில் இன்று தனுசு ராசி நேயர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் அமைய கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். விளையாட்டுத் துறையிலும் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.
இன்று மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள் அது போதும். கூடுமானவரை ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்கிவிடுங்கள். உங்களுடைய செயல்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்