Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “மனதில் உற்சாகம் அதிகரிக்கும்”… மற்றவரிடம் பேசும்போது கவனம்..!!

எப்பொழுதுமே மற்றவர்களுக்காக கடுமையாக உழைக்கக் கூடிய தனுசு ராசி அன்பர்களே.!! இன்று உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறு விலகி செல்லும். எதிர்காலத் தேவைக்கு பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் வளரும். இன்று செலவைக் குறைப்பதன் மூலம் பணம் தட்டுப்பாடு குறையும். பேச்சில் கடுமை காட்டாமல் இருப்பது நன்மை கொடுக்கும். மேலிடத்தின் மூலம் மனம் மகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் மற்றவரிடம் பேசும்போது கவனமாக பேசுங்கள்.

இரகசியம் காப்பது மிகவும் நல்லது. குடும்பத்தை பற்றி பேசவேண்டாம். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அதுபோலவே திட்டமிட்டு காரியங்களை எதிர்கொள்ளுங்கள். வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான  காரியத்தை செய்யும்போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நீங்களும் மனமகிழ்ச்சி பெறுவீர்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான  திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |