Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “மனதில் இருந்த சஞ்சலம் தீரும்”.. கோபத்தை குறையுங்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்றும் மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி நிலை இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் பெருமையை தேடிக் கொடுக்கும். மாணவர்கள் தனித் திறமையால் புகழ் பெறக் கூடும். இன்று தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும். கவனம் இருக்கட்டும். பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் இருக்கட்டும்.

குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் இன்று கிட்டும். வெளியூர் பயணங்களையும் இன்று நீங்கள் மேற்கொள்வீர்கள். அந்த பயணம் வெற்றிகரமாக இருக்கும். கூடுமானவரை காரியங்களை செய்யும்போது மட்டும் பொறுமையாக நிதானமாக செய்யுங்கள். அக்கம் பக்கத்தினரிடம் பழகும்போது கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள். எந்த காரணத்தைக் கொண்டும் கோபம் மட்டும் படாதீர்கள்.

இன்று கோபத்தை குறைத்துக் கொண்டால் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு நன்மை நடக்கும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |