தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் செயல் திறனைப் பார்த்து சிலர் பொறாமை படக்கூடும். சொந்த பணியில் கவனம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபாயத்தை தேடுவீர்கள். சேமிப்பு பணம் செலவாகும். மனைவியின் கருத்து குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் கொஞ்சம் திடீரென்று ஏற்படக்கூடும்.
இன்று கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான உறவு இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வது மட்டும் நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றியும் உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற துணிச்சல் இருக்கும். உங்களுடைய அனுபவ பூர்வமான அறிவுத்திறன் உங்களுக்கு கைக்கொடுக்கும். பணவரவு இன்று தாமதப்பட்டு தான் வந்து சேரும்.
மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து பாடங்களை தெளிவாக படித்து பின்னர் அதை எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்