Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “விழிப்புணர்ச்சி தேவை”.. உறவினர்கள் ஆதங்கப்பட கூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் கொஞ்சம் அதிகரிக்கும். விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சி தேவை. உங்கள் வளர்ச்சியை கண்டு உறவினர்கள் ஆதங்கப்பட கூடும். அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். இன்று விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் போன்றவை தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு சரியாகும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். இன்று மாணவர்களுக்கு கொஞ்சம் கல்வியில் தடை இருக்கும்.

கூடுமானவரை கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |