தனுசு ராசி அன்பர்களே..!! இன்று செல்வாக்கு உயரும் நாளாக இருக்கும். செயல்பாடுகளில் திறமை பளிச்சிடும். விஐபிக்களின் ஒத்துழைப்பு உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். காணாமல் போன பொருள் கைக்கு கிடைக்கும். இன்று பயணங்கள் செல்ல நேரிடலாம் வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும்.
சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைவது போலத் தோன்றலாம் பார்த்துக்கொள்ளுங்கள். சகோதரர் வகையில் ஏதாவது பிரச்சினை கொஞ்சம் தலை தூக்கலாம் கவனம் இருக்கட்டும். விருப்பமான நபரை இன்று சந்தித்து மகிழ்வீர்கள். இன்று மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். அனைவரின் ஒத்துழைப்போடு இன்று சிறப்பான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்