Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “எந்த நெருக்கடியையும் சமாளிப்பீர்கள்”… நிதானம் இருக்கட்டும்..!!

மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உயரதிகாரிகள் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். வழக்கமாக செய்யும் பணிகளில் இன்று சில மாற்றங்களைச் செய்வீர்கள். இளைய சகோதரர்களால் நன்மை கிட்டும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எந்த நெருக்கடியையும்  சமாளிக்கும் தெம்பும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான  காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக இருக்கும். நிதானம் இருக்கட்டும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கூடுமானவரை நீங்கள் பொறுமையாக இருங்கள். அது போலவே படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று உங்களுக்கு முக்கியமான வேலைகளை செய்யும் பொழுது முக்கியமான காரியங்களை எதிர்கொள்ளும்போது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |