Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “இன்று தன்னம்பிக்கை வளரும்”.. கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று இடையூறு செய்பவரை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாக்கி மனதை கஷ்டப்படுத்தும். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். வாகனத்தில் மிதவேகத்தை  பின்பற்றுவது நல்லது. இன்று உங்களுடைய தன்னம்பிக்கை வளரும் நாளாக இருக்கும். அதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சியும் அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும் பணவரவு ஓரளவு தான் இருக்கும்.

நீங்கள் பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது நிதானமாக இருங்கள். கூடுமானவரை வாக்குவாதங்கள் இல்லாமல் பேசுங்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பூசல்கள் இருக்கும். குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் எழக்கூடும். ஆகையால் நீங்கள் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். இன்று மாணவர்கள் கல்விக்காக கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடுமையாக உழையுங்கள், நல்ல பலனை நீங்கள் பெறுவீர்கள்.

அதுமட்டுமில்லாமல் சக மாணவரிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய  அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |