தனுசு ராசி அன்பர்களே..!! இன்று முன்னேற்றம் அதிகரிக்க சிவ பெருமானை மனதார வழிபடுங்கள். முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வரக்கூடும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள். இன்று எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். பணவரவில் உங்களுக்கு நிறைவு இருந்தாலும் செலவு இன்றைக்கு கூடும். சரியான பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.
அதுபோலவே உடல் ஆரோக்கியத்தில் மட்டும் இன்று கவனமாக இருங்கள். வயிற்று பிரச்சினைகள் போன்ற நோய்கள் வரக்கூடும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாக தான் நடக்கும். தனவரவு இருக்கும். ஆனால் செலவு இருக்கும், அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். தெய்வீக பக்தி இன்று அதிகமாகவே காணப்படும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். சக மாணவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள். நினைத்த காரியம் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்