Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு…”நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும்”.. வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..!!!  இன்று உங்களுக்கு நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரக்கூடும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பண நெருக்கடிகள் தீரும். உடன்பிறப்புக்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்து கொடுப்பீர்கள். வாகனம் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும்.

கணவன் மனைவியிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை, அவரால் உதவியும் உண்டாகும். இன்று வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். இன்று அக்கம் பக்கத்தினர் இடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். வாக்குவாதங்களை முற்றிலும் இன்று தவிர்த்து விடுங்கள்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் தடை இருக்கும். கொஞ்சம் கடினபட்டுத்தான் தான் முன்னேற வேண்டியிருக்கும். ஆசிரியரின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |