தனுசு ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய வாக்குவாதத்தை மட்டும் நீங்கள் தயவுசெய்து குறைத்துக் கொண்டால் அனைத்து விஷயங்களுமே படு சூப்பராக இருக்கும். அரசியல் துறையை சார்ந்தவர்களுக்கு எடுக்கக் கூடிய காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும். கூடுதலான உழைப்பு இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். சக மனிதரிடம் நீங்கள் பேசும்போது அனுசரித்துச் செல்லுங்கள். கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். காரியத்தை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள். இன்று தன வரவு கிடைப்பதை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மற்றவரின் ஆதரவு கிடைக்கும். அதே போல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது ரொம்ப கவனமாக நீங்கள் செய்யவேண்டும். கூடுமானவரை உதவிகள் செய்யும் பொழுது சில பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கும். அதை யோசித்து நிதானமாக செய்யுங்கள். வாகனத்தில் செல்லும்போது கூட ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று மிக முக்கியமாக வெளிவட்டாரத் தொடர்புகள் உங்களுக்கு விரிவடையும். தொழிலுக்கு ரொம்ப முக்கியம் வெளிவட்டாரத் தொடர்பு தான். அது உங்களுக்கு விரிவடைவதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை நீங்கள் சந்திக்க கூடும். இன்று பங்குச்சந்தையில் வெற்றிகரமான வாய்ப்புகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும்.
ஏற்றுமதி துறை சார்ந்தவர்கள் கூட நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். வரவேண்டிய பணம் உங்களுக்கு வந்து சேரும். இருந்தாலும் யாரிடமும் கோபப்படாமல் பேசுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு எப்பொழுதும் போலவே இருக்கும். சக மாணவர்கள் மட்டும் கோபப்படாமல் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்