தனுசு ராசி அன்பர்களே..!! இன்று இன்னல்கள் தீர இறைவனை வழிபட வேண்டிய நாளாக இருக்கும். திருமண முயற்சி கைகூடும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். பகலிரவாக பாடுபட்டவருக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். இன்று வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் பன்மடங்கு உயரும். வாடிக்கையாளரிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்கள் நிறுவன பங்குகள் இன்று உயரக் கூடிய வாய்ப்புகள் இருக்கு.
ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்படக் கூடும். அதேபோல கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரவு வந்து சேரும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கக்கூடும். இன்று புதிய வாய்ப்புகள் கூட உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். ஆனால் சரியான வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்றார்போல் நடைமுறை படுத்திக்கொள்ளுங்கள்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் இருக்கும். அதேபோல் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்