தனுசு ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்கள் இயன்ற அளவில் உங்களுக்கு உதவிகளை புரிவார்கள். நண்பர்கள் சிலர் தேவையற்ற ஆலோசனை சொல்லக்கூடும். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். மனம் தியானம் தெய்வ வழிபாடு போன்றவற்றை தேடி அலைய கூடும். இன்று எதிலும் நிதானம் இருக்கட்டும். மாணவர்கள் சக மாணவரின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. அனைவரையும் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது.
இன்று சுமுகமான சூழ்நிலையை சந்திக்க வேண்டுமென்றால் கொஞ்சம் நீங்கள் அமைதியாக காணப்படவேண்டும். அதே போல எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். இன்று புதிய முயற்சிகளை நீங்கள் செய்யும் பொழுது பெரியாரிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். கூடுமானவரை அனுபவிக்கவரின் ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். குடும்பத்தை பொறுத்த வரை எந்த விதப் பிரச்சினையும் இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.
இன்று மனைவி மூலம் நீங்கள் ஒரு சில முக்கிய பணியை செய்து முடிப்பீர்கள். அதனால் உங்களுடைய மனம் மகிழ்வாக காணப்படும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்