மற்றவர்களுக்கு உதவி செய்வதில் வல்லமைமிக்க தனுசுராசி அன்பர்களே..!! இன்று தனவரவு அதிகரிக்கும். பெண்கள் மூலமாக எதிர்பார்த்த லாபங்கள் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாகவும் இன்று இருக்கும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள் கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கும்.
பணி நிமிர்த்தமாக பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். அதனால் உங்களுக்கு அலைச்சலும் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். முடிந்தால் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மற்றும் நீல நிறம்