Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “பல நாள் சங்கடம் இன்று தீரும்”.. கணவன்- மனைவிக்கிடையே அன்பு..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று மனதில் பல நாள் இருந்த சங்கடம் இன்று தீரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். இன்று கலைத்துறையினர் அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆலயம் சென்று வருவீர்கள். தெய்வீக நம்பிக்கை கூடும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். குடும்பத்தில் எந்த வித பிரச்சினை இல்லாமல் சிறப்பாக செல்லும். ஒற்றுமை பலப்படும். சகோதரர்  வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

ஆசிரியர்களின் ஆதரவு இருக்கும். சக மாணவரின் ஆதரவும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |