தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவுக்கு வரக்கூடும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இன்று சிலருக்கு இடமாற்றம் ஏற்பட கூடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவரின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. ஆசிரியர்களின் சொல்படி மட்டும் கேட்டு நடந்து கொள்ளுங்கள். இன்று வெளியூர் பயணம் உங்களுக்கு இனிமையான பயணத்தை கொடுக்கும். அதுபோலவே தனவரவு ஓரளவு சிறப்பை கொடுப்பதாக இருக்கும்.
இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்